காமராஜர் திருவிழா , 15.07.2022

நமது அவ்வை நவீன பள்ளியில் 15.07.2022 அன்று பிற்பகல் 2.00 மணியளவில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டவருமான அண்ணல் காமராசரின் 120 வது பிறந்தநாளை அவ்வைப் பள்ளி குழந்தைகளும் அண்ணா அக்காக்களும் கொண்டாடினோம். விழாவின் துவக்கத்தில் பள்ளி ஆசிரியை திருமதி சுபப்ரியா அக்கா அவர்கள் வரவேற்புரையாற்றினார். அதனை தொடர்ந்து அவ்வைப் பள்ளி தாளாளர் திரு சுரேஷ் அண்ணா தமிழகத்தில் கல்விக்கு கண்கொடுத்த காமராசரைப்பற்றி சுவையான பல தகவல்களை கூறினார். பின்னர் பள்ளி வளாகத்தில் காமராசருக்கு மாலை அணிவித்தோம். அதனை தொடர்ந்து திருமதி ராணி அக்கா பள்ளி குழந்தைகள் அவைவருக்கும் இனிப்பு வழங்கினார். இந்த விழாவில் காணொளி மூலமாக டில்லியிலிருந்து இணைந்த பேராசிரியர் சீனிவாசன் அண்ணா காமராசரைப் பற்றி பேசுகையில் காமராசர் எப்படி ஊர் ஊராக சென்று ஊர் பெரியவர்களிடம் அவர்களின் ஊரில் பள்ளிகள் துவக்க வேண்டி கேட்டுக்கொண்டதையும், எல்லா அரசு தொடக்கப் பள்ளிகளில் மதிய உணவு அரசு வழங்கும் திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் காமராசர் துவங்கியதையும் நினைவு கூர்ந்தார்.

அதனை தொடர்ந்து அவ்வை பள்ளி தமிழ் ஆசிரியை திருமதி மகாதேவி அக்கா கல்வி கற்றலின் அவசியத்தையும் காமராசரின் வாழ்க்கை வரலாற்றையும், கவிதைகளையும் பேச ஆர்வத்தோடு இருக்கும் குழந்தைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். அவ்வைக் குழந்தைகள் கவிதைகள் வாசித்தனர் உரையாற்றினார். அதன் பிறகு இனிதே காமராஜர் விழா நிறைவுற்றது.